Friday, 8 May 2015

தாய் கிரகம்!

அன்பைப் பாலாய் வார்த்தாய்!
பாசத்தைப் பரிவுடன் காட்டினாய்!
நேசத்தை நெகிழ்வுடன் காத்தாய்!
கனிவைக் கண்ணுக்குள் வைத்தாய்!
துக்கத்தின் வடிகாலாய் வந்தாய்!
ஏக்கத்தின் வாசனையை மறைத்தாய்!
அவனியில் ஒவ்வொருவரும் அன்னைக்கு 
ஓர்  ஆலயம் வைத்திட 
நினைத்திட்டால் புவனத்தில் ஏது 
மாந்தர்க்கு வசதி?
எனவே விண்ணில் ஒரு 
பூமி சமைத்து வைத்தேன் 
அதன் பெயர் தாய் கிரகம்!

அன்னைக்கு சமர்ப்பணம் 

அன்னையர் தின வாழ்த்துக்கள் !!!



வாழ்க தாய்மை!      
வளர்க நம் மனத்தூய்மை!!     
மேலும் உய்க நம் பெருமை!!!