Tuesday, 10 November 2015

November 10 - 2015 - World science Day - And Happy Diwali

World Science Day for Peace and Development

Established by UNESCO in 2001, World Science Day for Peace and Development is celebrated worldwide on 10 November each year. It offers an opportunity to demonstrate to the wider public why science is relevant to their daily lives and to engage them in debate on related issues.
By throwing bridges between science and society, the aim is to ensure that citizens are kept informed of developments in science, while underscoring the role scientists play in broadening our understanding of the remarkable, fragile planet we call home and in making our societies more sustainable. Recent themes have included ‘towards green societies’ (2011), science for the rapprochement of peoples and cultures (2010) and astronomy (2009).
Every year, intergovernmental and non-governmental organizations, scientific research institutions, professional associations, universities, municipalities, the media, science teachers, schools and others are encouraged to organize their own celebration of World Science Day.
Since its inception, World Science Day has also generated concrete projects, programmes and funding for science around the world. Several ministries have announced an increase in spending on science, for instance, or the creation of a university or research body. The Day has also helped to foster cooperation between scientists living in regions marred by conflict, one example being the creation of the Israeli-Palestinian Science Organization (IPSO), with UNESCO support.
World Science Day was instigated as follow-up to the World Conference on Science, organized jointly by UNESCO and the International Council for Science in Budapest (Hungary) in 1999. The Day offers an opportunity to reaffirm each year our commitment to attaining the goals proclaimed in one of the twin documents adopted by the World Conference on Science: the Declaration on Science and the Use of Scientific Knowledge and to follow up the recommendations contained in the Conference’s Science Agenda: Framework for Action. The biennial World Science Forum is always held as close as possible to World Science Day.
© Mayank Malhotra, DAV college for girls, YamunaNagar, India, Celebration of World Science Day 2010 in India
Resources for organizing your own celebration of World Science Day
UNESCO produced a 2015-2016 Calendarwhich can be downloaded from the website. Exceptionally there is no poster this year.
UNESCO also produced an open access, quarterly magazine, A World of Science, which popularizes science and discusses a wide range of contemporary issues, including freshwater management and biodiversity protection, greening chemistry, sustainable agriculture and climate change. All the stories published in the journal are freely available to interested parties, who may use them as a resource.



Saturday, 3 October 2015

Virundhinar Pakkam | ஜெகநாதன், 'நல்லக் கீரை' அமைப்பாளர் | Dt 16-07-14

கோரக்கர்: செல்வம் பெருக எளிய வழிகள்

கோரக்கர்: செல்வம் பெருக எளிய வழிகள்: செல்வம் பெருக எனது குருநாதர் அவர்கள் சில வழிகளை கூறியுள்ளார் . அவற்றை என்   குருவின் அனுமதியோடு நான் இங்கு பகிர்ந்துகொள்கிறேன்...

Sunday, 6 September 2015

ஆசிரியர் தின வாழ்த்துக்கள்!

அர்ப்பணித்தலால் நமக்கு அறப்பணி - மாணவர்களை நல்வழியில்
ஆட்டுவித்தலால் அவர்களுக்குக் கிட்டும் அறிவுக்கனி
இனிதே நாம் இப்பணி செய்யின் - அன்னையர்கள் பலர்
ஈன்ற பொழுதின் பெரிதுவப்பர் தம் மக்களை சான்றோன் எனக் கேட்டு!
உள்ளத்தால் உவகையோடு -மனத்திட்பம் ஊட்டி
ஊருக்கு சேவை செய்வோம் நம் வீட்டுப் பிள்ளைகள் வளர!
எம் பெயர் ஏறும் கல்லெழுத்தாய் மாணவ மனங்களில்
ஏனிப்படி என பல வித்தைகளை உணர்த்த முயலும் நாங்கள் ஏணிப்படிகள்!
ஐயம் உண்டாயின் தீர்ப்போம்! இன்றேல்  உருவாக்கி உணர்த்துவோம்!
ஒற்றுமையை விதைப்போம்! பல மாறுபட்ட மாணவ மனங்களுக்குள்!
ஓதும் செயலே நன்று என்பதை வழக்கத்தில் கொணர்வோம்! - இப்பணி செய்யின்
ஔடதம் தேவை இல்லை நம் கர்ம வினை கழிக்க!
எஃகு போல் உறுதி கொள்வோம்! அறப்பணி செய்ய!
கற்போம்!  கற்பிப்போம்!  மாணவர்களுக்குள் தூங்க விடாத
கனவுகளை விதைப்போம்!. ஏனெனில் நாம் ஆசிரியர்கள் !
வளர்விப்பதால் நாம் வளர்கின்ற  மரம்!
மாணவ வாழ்க்கையை மணப்பிப்பதால் நாம் மணகின்ற பூ!
ஊக்குவித்தல் பணியால் நாம் சத்தான காய்!
மனித வளம் பெருகக் காரணியானதால் நாம் கனி!
அக்கனியின் விதை மேலும் உருவாக்கும் பல ஆசிரியர்களை இனி!
 நம் இனிய இப்பணி ஒரு தொடர் சங்கிலி!
விதை மீண்டும் மரமாகும்! இல்லையேல்
உரமாகும் பற்பல துறை வித்தகர்களை உருவாக்க!
கர்வம் கொள்வோம் இப்பணி நம் வசமானதற்காக!
கருணையோடு கடமை மேற்கொள்வோம்  இந்தியாவை வசந்தத்தின் வசமாக்க!

நன்றி!  வாய்ப்புக்கு நன்றி! அனைவருக்கும் ஆசிரியர் தின வாழ்த்துக்கள்!

Tuesday, 21 July 2015

ஆண்டாள் அழகு! அவள் தவம் அழகோ அழகு!  அவள் கவி அழகு! இத்தனை அழகுக்கும் அழகு செய்யும் உம் கதை நடை அழகு! படிக்கையில் எம்மை ஆண்டாளாகவே அவள் தவத்தை உணரச் செய்து விட்டீர்கள். ரொம்ப நன்றி!

Wednesday, 10 June 2015

அம்மா வந்தாச்சு

        சங்கீதாவிற்கு இன்று ஒரே அம்மா ஞாபகம்? நாளைக்கு அன்னையர் தினம். அம்மா கூட இருந்தால் நன்றாயிருக்கும்? நடக்குமா? நடக்குமென்றால் எப்படி? தெரியவில்லை.
       போன  வருடம் அம்மா கூட இருந்தது நினைவில் வந்து போனது. அம்மா அப்பிராணி போலத் தெரிவாள். ஆனால் அப்பிராணி   அல்லள். பேதை போலத் தெரிவாள் ஆனால் அவள் ஒரு  மேதை. அவள் சொல்லித்தந்த கதைகள் மனசுக்குள் காவியங்களாய் கல்லெழுத்துக்களாய் அழகிய ஓவியங்களாய் என்றுமே மறையாதவை. அவள் பாடிய பாடல்களை பி.சுசீலா வந்து பாடினாலும் மனது ஏற்காது. அம்மா வருவாளா? என் நைந்து போன உள்ளம் தைத்து வைக்க அவள் வருவாளா? அடிகொருதரம் கண்கள் ஏனோ அம்மாவைத் தேடியது. அம்மா வரணும் மனது வேண்டியது. அதற்காக வேலை செய்யாமலா இருக்க முடியும்?
         சிங்கில் அழுக்கு பாத்திரங்கள் காத்திருந்தது. அவற்றை ஆதரிக்கும் வண்ணம் விளக்கி அலசிக் வைத்தாள். "கண்ணு பாத்தா கை செய்யணும்" - அம்மா அடிக்கடி சொல்லும் வசனம். அது எவ்வளவு சரியான ஒன்று என்பதை சமீப காலமாக அதை உண்மை என்பதை சங்கீதா உணர்கிறாள். சின்னச் சின்னதாக பாத்திரங்கள் விழும் போதே செய்யணும் என நினைக்கிறாள். ஆனால் அதிகமாக பாத்திரம் சேர்ந்த பிறகே மிகவும் கஷ்டப் பட்டு செய்கிறாள். எடுக்கிற பொருள் எடுத்த இடத்தில் வைக்க வேண்டும். சரியான படி இல்லாததை பார்க்க நேர்ந்தால் உடனே அதை சரியாக வைக்க வேண்டும். இப்படி அம்மாவோட வழி நடத்துதல்கள் எராளம். அம்மா வரணுமே என மனது மிக ஏங்கியது.
    தூங்கும் போது கூட ஆடை விலகாமல் ஒருக்களித்து அழகாகத் தூங்க வேண்டும். தூங்கினாலும் பெண்ணுக்குள் ஒரு விழிப்பு உணர்வு இருக்க வேண்டும்.  "அது அவளை இராவணன் கோட்டையிலும் சீதையக்கும்" -என்பது அம்மா அபிப்ராயம். அப்படித்தான் அம்மா வளர்த்தாள். அப்படி வளர்ந்த காலத்தில் அம்மா மேல் கோபம் கோபமாக வரும். அனால் இன்று அந்த வளர்ப்பு பலராலும் பாராட்டப் படுகிறது. அம்மா சிம்ப்ளி கிரேட் .
                 வேலையெல்லாம் முடிந்தது.  கணினியில் பேஸ்புக் பக்கங்களை பார்த்துக் கொண்டிருந்தாள். நிறைய அன்னையர் தின வாழ்த்துக்களை பலர் அள்ளி விட்டிருந்தார்கள். அம்மா எப்போம்மா வருவே? மனம் முழு வீச்சில் ஏங்கியது.
                "சங்கீதா. . .  சங்கீதா. . .  " வாசலில் அம்மாவின் குரல் போல் கேட்டது. மனது "இது எப்படி சாத்தியம்?  பிரமையோ"எனக் கூறிக் கொண்டது.   "சங்கீதா. . .  சங்கீதா. . .  " மீண்டும் அதே குரல், ஆனால் கொஞ்சம் ஆண்மை கலந்திருந்தது. சந்தேகத்துடன் வாசல் சென்று கதவைத் திறந்தவளுக்கு இன்ப அதிர்ச்சி. வந்திருந்ததோ  இரத்தினம் மாமா. சங்கீதாவிற்கு தாய் மாமா. அம்மாவின் அண்ணா.
        அவளுக்கோ மகிழ்ச்சி. போன மாதம் மீளாத் துயரில் எங்களை ஆழ்த்தி விட்டுச் சென்ற அம்மா இன்று எப்படி வர இயலும்? ஆனால் அவள் வந்து விட்டாள், பத்மா அம்மாவாக இல்லை, சங்கீதாவின் அம்மானாக. கடவுள் எவ்வளவு கிரேட். "தாய் மாமன் தாய்க்கு சமம்" - அம்மாவின் ஒலிகள் காதில் ஒலித்தது. அம்மா(ன்) வந்தாச்சு. அன்னையர் தினம் கொண்டாட. அம்மா(ன்)வை கவனிக்க, விருந்து படைக்க சங்கீதா ரெடியானாள்.

Friday, 8 May 2015

தாய் கிரகம்!

அன்பைப் பாலாய் வார்த்தாய்!
பாசத்தைப் பரிவுடன் காட்டினாய்!
நேசத்தை நெகிழ்வுடன் காத்தாய்!
கனிவைக் கண்ணுக்குள் வைத்தாய்!
துக்கத்தின் வடிகாலாய் வந்தாய்!
ஏக்கத்தின் வாசனையை மறைத்தாய்!
அவனியில் ஒவ்வொருவரும் அன்னைக்கு 
ஓர்  ஆலயம் வைத்திட 
நினைத்திட்டால் புவனத்தில் ஏது 
மாந்தர்க்கு வசதி?
எனவே விண்ணில் ஒரு 
பூமி சமைத்து வைத்தேன் 
அதன் பெயர் தாய் கிரகம்!

அன்னைக்கு சமர்ப்பணம் 

அன்னையர் தின வாழ்த்துக்கள் !!!



வாழ்க தாய்மை!      
வளர்க நம் மனத்தூய்மை!!     
மேலும் உய்க நம் பெருமை!!!