Sunday, 6 September 2015

ஆசிரியர் தின வாழ்த்துக்கள்!

அர்ப்பணித்தலால் நமக்கு அறப்பணி - மாணவர்களை நல்வழியில்
ஆட்டுவித்தலால் அவர்களுக்குக் கிட்டும் அறிவுக்கனி
இனிதே நாம் இப்பணி செய்யின் - அன்னையர்கள் பலர்
ஈன்ற பொழுதின் பெரிதுவப்பர் தம் மக்களை சான்றோன் எனக் கேட்டு!
உள்ளத்தால் உவகையோடு -மனத்திட்பம் ஊட்டி
ஊருக்கு சேவை செய்வோம் நம் வீட்டுப் பிள்ளைகள் வளர!
எம் பெயர் ஏறும் கல்லெழுத்தாய் மாணவ மனங்களில்
ஏனிப்படி என பல வித்தைகளை உணர்த்த முயலும் நாங்கள் ஏணிப்படிகள்!
ஐயம் உண்டாயின் தீர்ப்போம்! இன்றேல்  உருவாக்கி உணர்த்துவோம்!
ஒற்றுமையை விதைப்போம்! பல மாறுபட்ட மாணவ மனங்களுக்குள்!
ஓதும் செயலே நன்று என்பதை வழக்கத்தில் கொணர்வோம்! - இப்பணி செய்யின்
ஔடதம் தேவை இல்லை நம் கர்ம வினை கழிக்க!
எஃகு போல் உறுதி கொள்வோம்! அறப்பணி செய்ய!
கற்போம்!  கற்பிப்போம்!  மாணவர்களுக்குள் தூங்க விடாத
கனவுகளை விதைப்போம்!. ஏனெனில் நாம் ஆசிரியர்கள் !
வளர்விப்பதால் நாம் வளர்கின்ற  மரம்!
மாணவ வாழ்க்கையை மணப்பிப்பதால் நாம் மணகின்ற பூ!
ஊக்குவித்தல் பணியால் நாம் சத்தான காய்!
மனித வளம் பெருகக் காரணியானதால் நாம் கனி!
அக்கனியின் விதை மேலும் உருவாக்கும் பல ஆசிரியர்களை இனி!
 நம் இனிய இப்பணி ஒரு தொடர் சங்கிலி!
விதை மீண்டும் மரமாகும்! இல்லையேல்
உரமாகும் பற்பல துறை வித்தகர்களை உருவாக்க!
கர்வம் கொள்வோம் இப்பணி நம் வசமானதற்காக!
கருணையோடு கடமை மேற்கொள்வோம்  இந்தியாவை வசந்தத்தின் வசமாக்க!

நன்றி!  வாய்ப்புக்கு நன்றி! அனைவருக்கும் ஆசிரியர் தின வாழ்த்துக்கள்!

No comments:

Post a Comment